துக்ளக் அரசமரபு என்பது நடுக் கால இந்தியாவில் தில்லி சுல்தானகத்தை ஆண்ட மூன்றாவது அரசமரபு ஆகும். தில்லியில் இந்த அரசமரபின் ஆட்சிக் காலமானது 1320-ஆம் ஆண்டு, கியாதல்தீன் துக்ளக் என்ற பட்டத்துடன் காசி மாலிக் அரியணைக்கு ஏறிய போது தொடங்கியது. இந்த அரசமரபானது 1413-ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. முகம்மது பின் துக்ளக்கால் தலைமை தாங்கப்பட்ட ஓர் இராணுவ படையெடுப்பின் மூலமாக இந்த அரசமரபு அதன் நிலப்பரப்பை விரிவாக்கிக் கொண்டது. 1330, 1335 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் இது அதன் உச்சபட்ச பரப்பளவை அடைந்தது. இந்தக் குறுகிய காலத்திற்கு பெரும்பாலான இந்திய துணைக்கண்டத்தை இது ஆண்டது. மேலும்...
242 பேருடன் சென்ற ஏர் இந்தியா வானூர்தி 171 (படம்) இந்தியா, அகமதாபாதில் தரையில் மோதி வெடித்ததில் 241 பயணிகளும், தரையில் குறைந்தது 28 பேரும் உயிரிழந்தனர்.
துட்டு என்பது தற்போது வழக்கில் இல்லாத குறைந்த மதிப்பு கொண்ட பழைய டச்சு செப்பு நாணயம் ஆகும். இது தமிழில் குறைந்த மதிப்புள்ள பணத்தைக் குறிக்கும் ஒரு பேச்சு வழக்காக உள்ளது.
இந்த விக்கிப்பீடியா தமிழில் எழுதப்பட்டுள்ளது. 2003-இல் தொடங்கப்பட்டது, தற்போது 1,75,351 கட்டுரைகள் உள்ளன. மேலும் பல விக்கிப்பீடியாக்கள் உள்ளன; அவற்றுள் மிகப்பெரியன கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.